15 நிமிடம் நடனம் ஆட ரூ.5 கோடி கேட்ட பிரபல நடிகர்…

ஆரம்ப விழா நிகழ்ச்சி ஒன்றில் ரன்வீர் சிங் நடனம் ஆட, ரூ. 5 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதை அறிந்த மற்ற நடிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்குக்கு ‘பத்மாவத்’ படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதில் அவர் நடித்து இருந்த அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரம் பேசப்பட்டது.

ரன்வீர் சிங்குக்கு இந்தியில் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அவருக்கும் இந்தி நடிகை தீபிகா படுகோனேவுக்கும் காதல் மலர்ந்துள்ளது. விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளனர்.

அடுத்த மாதம் நடைப்பெறவுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஆரம்ப விழா நிகழ்ச்சியில் ரன்வீர் சிங்கை சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அழைத்துள்ளனர்.

இதில் 15 நிமிடங்கள் அவர் நடனம் ஆடுகிறார். இதற்காக அவருக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது மற்ற இந்தி நடிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.