15 வருடங்களுக்கு பின்னர் இலங்கைக்கு நடக்கவுள்ளதை மேற்கிந்திய தலைவர் கூறுகிறார்…

முதல் டெஸ்ட் போட்டியினை விட இரண்டாம் டெஸ்ட் போட்டியின் போது அதிக கவனம் செலுத்த இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் முன்வந்திருந்ததாக மேற்கிந்திய டெஸ்ட் அணித் தலைவர் ஜோசன் ஹோல்டர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

“முதல் டெஸ்ட் போட்டியினை விட இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் முன்னேறியிருந்தனர் என்றே கூறவேண்டும். தொடரினை சமநிலைப்படுத்த அவர்கள் மூன்றாவது டெஸ்ட் முடிவில் சிறப்பாக ஆடுவார்கள். ஆனால் நமது வீரர்கள் சதம் மற்றும் அரை சதம் பெறும் மனநிலையில் உள்ளனர். ஆதலால் இறுதிப் போட்டி இருதரப்பிற்கும் முக்கியம். ஏனெனில், நாம் 15 வருடங்களாக டெஸ்ட் போட்டியில் இலங்கையினை வென்றதில்லை.. அதனை சாதிக்க நமக்கு அதிக வாய்ப்பு உண்டு நாம் ஒரு போட்டியினை வென்றுள்ளதால்”.