15 வருட காலமாக ஹக்கீம் கதிரைகளை சூடாக்கியதை தான் செய்தார் – ரிஷாத்

முன்னாள் ஜனாதிபதிகளான ஆர்.பிரேமதாச மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோர் ஜனாபதியில் அமர்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் செயற்பட்டதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர்,அமைச்சர் றிசாத் பதியுதீன் அவரது மறைவிற்கு பின்னர் தலைவராக வந்த ரவூப் ஹக்கீம் முஸ்லிம் சமூகத்தின் விடயத்தில் பொடு போக்குடன் நடந்து கொண்டார் என்றும் கூறினார்.

திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதிரத்து வரிப்பொத்தாஞ்சேனையில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று பேரம் பேசும் சக்தியினை இழந்துவிட்டதாகவும்,இவர்கள் இந்த தேர்தலில் ஒரு ஆசனத்தையே பெறுவார்கள் என்றும் சொன்னார்.மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் இந்த கட்சியினை உருவாக்கி இம்மக்களுக்கு எதனையெல்லாம் பெற்றுக்கொடுக்க முடியுமோ அதனை பெற்றுக்கொடுத்து வந்தார்.ஆனால் அவரது மறைவின் பின்னர் இந்தக்கட்சியின் சாரதியாக அமர்ந்த ஹக்கீம் எதனை செய்து கொடுத்துள்ளார்.

அவரது 15 வருட  தலைமைக்காலத்துக்குள்,வெறும் உரிமைகள் என்று பேசி பேசி காலத்தை ஓட்டியதுடன்,பாராளுமன்ற கதிரைகளை சூடாக்கியதை தான் செய்தார்.அன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியினை தீர்மானிக்கும் கட்சியாக இருந்தது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவா,மைத்திரியா என்று இருந்த போது நாங்கள் மைத்திரிதான் வெல்ல வேண்டும் என்று தபால் வாக்களிப்புக்கு முன்னைய தினத்தில் மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு வாக்களிக்குமாறு  வேண்டினோம்.ஆனால் ரவூப் ஹக்கீம் அன்றைய தினத்தில் வேண்டினார்.மனசாட்சி படி வாக்களியுங்கள் என்று.தையரியமாக துணிந்து சமூகத்திற்காக தீர்மானங்களை எடுக்க முடியாத கோழதை்தனமான அரசியல் தலைமைத்துவங்களை நாம் நம்பி இனியும் ஏமாந்துவிடக் கூடாது,

அஸ்ரப் அவர்கள் இந்த கட்சியினை ஆரம்பித்து கூட்டங்களுக்கு செல்கின்ற போது அவரை நோக்கி கற்கள் வந்தன.இருந்த போதும் தமது பணியினை செய்தார். இன்றும் அதே வேளையினை இறக்காமத்திலும்,அட்டாளைச் சேனையிலும் செய்கின்றனர். கூட்டங்களை குழுப்புவதற்கு  அடியாற்களை கற்கள் சகிதம் இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அனுப்புகின்றது.

இந்த கற்களுக்கு நாம் பயந்தவர்கள்,அல்ல சத்தியத்தினையும்,நேர்மையான அரசியலினையும் மக்களுக்கு கொண்டு செல்லும் பணிக்கு எதிராக வரும் அனைத்து சவால்களையும் அல்லாஹ்வின் உதவி கொண்டு எதிர் கெள்ள தாயராகவுள்ளோம்.இந்த நாட்டில் உள்ள 23 இலட்சம் முஸ்லிம்களின் எதிர் காலத்தை தனிப்பட்ட சுயலாபங்களுக்காக அடகு வைக்கும் கைங்கரியத்திற்கு நாம் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம்.

எமது முஸ்லிம்களுக்கு எதிரதக மேற்கொள்ளப்பட்ட எத்தனையோ சதி தொடர்பில் இந்த கட்சிகள் எதனையும் பேசவில்லை.வில்பத்து காட்டினை முஸ்லிமகள் அழிக்கின்றனர்,சட்டவிரோதமாக குடியேற்றப்படுகின்றனர் என்றெல்லாம்,சிங்கள கடும் போக்கு சக்திகள் செயற்பட்ட போதும்,இந்த வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிராக வந்த தாக்குதல்களையும் முறியடிப்பதற்கு முஸ்லிம்களின் கட்சி என்று மார்தட்டிக் கொள்ளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதனை செய்து காட்டியுள்ளது என்று கேட்க விரும்பகின்றேன்.

என்றும் தேசிய தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.