நாட்டின் பல பகுதிகளில் 150 மில்லிமீற்றர் வரையிலான கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல் மத்திய ஊவா சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் சில பகுதிகளிலும் இவ்வாறு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வடமத்திய தென் மாகாணங்களிலும் வவுனியா உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் மழையை எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.