மூன்று மருத்துவ கல்லூரி மாணவிகள் தற்கொலை

தமிழகம் விழுப்புரம் பகுதியில் மூன்று மருத்துவ கல்லூரி மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி நிர்வாகம் மீது அதிருப்தி அடைந்த நிலையில் மூன்று மாணவிகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இது தற்கொலையல்ல, கொலை என உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அது குறித்த தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் மூன்று மாணவிகளும் தற்கொலை செய்து கொள்ளக் கூடிய வாய்ப்பு இல்லை எனவும் இது திட்டமிட்ட கொலை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விழுப்புரம் கள்ளக்குறிச்சி சின்னசேலம் அடுத்த பங்காரம் பகுதியிலுள்ள இயற்கை மருத்துவ யோகா கல்லூரியை சேர்ந்த மாணவிகளை இவ்வாறு சடலமாக நேற்று முன்தினம் மீட்கப்பட்டனர்.

இதேவேளை கல்லூரியின் தாளாளர் வாசுகியும் அவரது மகன் சுதாகர் என்பவரும் குறித்த மாணவிகளை மிரட்டியதாகவும், அவர்களுக்கு பாலியல் தொல்லைக்குட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.