
திருமண நிகழ்வில் இந்தியாவின் தேசியக்கொடியேற்றம்
மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் தாலி கட்டுவதற்கு முன்னர் மணமகன் இந்தியாவின் தேசியக்கொடியை ஏற்றிவைத்துள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம் கன்ட்வா மாவட்டத்தில் நடைபெற்ற திருமண வைபோகத்தின் போது, மணமகன் இந்தியாவின் தேசியக்கொடியை இவ்வாறு ஏற்றிவைத்தார்.
பின்னர், மணமக்கள் மற்றும் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள், தேசியக்கொடிக்கு வணக்கம் தெரிவித்தனர்.
அதன்பின்னர், மணமகன் மணமகளுக்கு தாலி கட்டியுள்ளார், இதுகுறித்து திருமணத்திற்கு வந்திருந்த சிறப்பு அழைப்பாளர் கூறியதாவது, இது எங்களுடைய நாடு, இதனால் நாட்டில் நடைபெறும் அனைத்து பண்டிகைகளுக்கும் முக்கித்துவம் அளிப்பது போன்று, குடியரசு தினம், சுதந்திர தினத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக இத்திருமணம் நடைபெற்றுள்ளது என்றும் கூறியுள்ளார்.
