முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று(27) நடக்கும் இறுதிப் போட்டியில் இலங்கை- ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இலங்கை அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தொடக்க முதலே திணறி வந்த ஜிம்பாப்வே அணி 36.3 ஓவரிலே 160 ஓட்டங்களுக்கு சுருண்டது.
ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக மசகண்டா 36 ஓட்டங்களும், சீன் வில்லியம்ஸ் 35 ஓட்டங்களும் எடுத்தனர்.
இலங்கை அணி சார்பில், வந்தர்சே, குணரத்னே தலா 3 விக்கெட்டுகளும், சச்சித் பதிரான 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
161 ஓட்டங்கள் எடுத்து இலங்கை அணியினர் வெற்றியை தனதாக்கிக் கொண்டனர்.