அடுத்த மாதம் பூமியை கடக்கவுள்ள விண்கல்.. அழியுமா பூமி?

அடுத்த மாதம் பூமியை கடக்கவுள்ள விண்கல்.. அழியுமா பூமி?

100 அடி அகலம் கொண்ட ஒரு மிகப் பெரிய விண்கல்லானது அடுத்த மாதமளவில் பூமியை கடந்து போகவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த விண்கல்லின் பெயர் 2013 டிஎக்ஸ்68 என்பதாகும்.

மிகப் பெரிய விண்கல்லாக இருந்தாலும் கூட இது பூமியைக் கடப்பதனால் நமது கிரகத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் நாசா விளக்கியுள்ளது.

இந்த விண்கல்லின் நகர்வை தற்போது நாசா விஞ்ஞானிகள் கூர்ந்து கண்காணித்து வருகின்றனர். இது நிச்சயம் பூமி மீது மோத வாய்ப்பே இல்லை என்றும் கூறியுள்ளனர் நாசா விஞ்ஞானிகள்.

பூமியை அழிக்கும் சக்தி இக்கல்லிற்கு இருந்தாலும் அக்கல் பூமியை அண்மிக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.