புரஹல – ஹிம்புட்டானை வரை சேவையில் ஈடுபடும் 164 இலக்க பேரூந்து, அங்கொடை – கொம்பனித்தெரு வரை போக்குவரத்தில் ஈடுபடும் 166 இலக்க பேரூந்து மற்றும் களனிமுல்லை – சீமாமாலகய வரை போக்குவரத்தில் ஈடுபடும் 150 ஆம் இலக்க பேரூந்து பணியாளர்கள் இன்று(07) பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
166 வீதி இலக்க பஸ்ஸின் சாரதி தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, குறித்த சாரதியைத் தாக்கிய சந்தேக நபரைக் கைது செய்யுமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்து, குறித்த 3 பஸ் சேவைகளின் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#rishma