16 மாதக்குழந்தைக்கு யார் தந்தை – குழம்பும் பச்சிளம்

16 மாதக்குழந்தைக்கு யார் தந்தை – குழம்பும் பச்சிளம்

அமெரிக்காவில் 16 மாதக்குழந்தை ஒன்று யார் தனது தந்தை எனத்தெரியாமல் குழம்பும் காட்சி வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரை சேர்ந்த ஸ்டீபன், கரோல் தம்பதியினருக்கு ரீத் என்ற 16 மாதக்குழந்தை உள்ளது.

ஸ்டீபன் மற்றும் மைக்கேல் ஆகிய இருவரும் ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரர்கள் ஆவர், இந்நிலையில், குழந்தை ரீத் தனது தந்தையை கண்டுபிடிக்கிறாரா என்பதனை பார்ப்பதற்காக, அண்ணன் தம்பி ஆகிய இருவரும் ஒன்றாக நின்று குழந்தையை வைத்து விளையாடிய குறும்பு விளையாட்டு, பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், ஸ்டீபன் மற்றும் மைக்கேல் ஆகிய இருவரும் கண்ணாடி அணிந்துகொண்டு நிற்கின்றனர், முதலில் ஸ்டீபன் கையில் இருக்கும் குழந்தை, மைக்கேலைப்பார்த்து தந்தை என்று கூறி தாவிச் செல்கிறது, பின்னர், மைக்கேல் ஸ்டீபனை பார்த்து, இவர் யார் என்று கேட்கிறார், அதற்கு குழந்தை, தந்தை என்று கூறி ஸ்டீபனிடம் தாவிச்செல்கிறது.

பின்னர், இருவரும் கண்ணாடி கழற்றிவிட்டு, குழந்தையிடம் கேட்கையில், அக்குழந்தை குழப்பத்தில் இருவரையும் பார்க்கிறது.

இந்த வீடியோ இதுவரை 12 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது, குழந்தையின் இந்த அழகிய குழப்பத்தினை சமூகவலைதளவாசிகள் ரசித்து பார்த்துள்ளனர், ஒரே நாளில் இக்குழந்தை இணையதளத்தின் நட்சத்திரமாகிவிட்டது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=sak-6AKqsX4″ width=”560″ height=”315″]