வவுனியாவில் தூக்கில் தொங்கியவாறு மீட்கப்பட்ட சிறுமி: துஷ்பிரயோகத்திற்கு பின் கொலை

வவுனியாவில் தூக்கில் தொங்கியவாறு மீட்கப்பட்ட சிறுமி: துஷ்பிரயோகத்திற்கு பின் கொலை

வவுனியா – உக்குளாங்குளம் பிரதேசத்தில் கடந்த 16 ஆம் திகதி தூக்கில் தொங்கி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் 13 வயது சிறுமி,  துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக வவுனியா அவசர மரணபரிசோதகர் நேற்று தீர்மானித்துள்ளார்.

குறித்த சிறுமி கடந்த 16 ஆம் திகதி பாடசாலைக்கு செல்ல முடியாது என கூறி வீட்டில் இருந்துள்ளார்.

எனினும் அவரது மூத்த சகோதரன் பாடசாலைவிட்டு வீட்டிற்கு வந்த போது தனது தங்கை தூக்கில் தொங்கியவாறு இருந்ததை கண்டுள்ளார்.

பின்னர் சிறுமியின் சடலத்தை வவுனியா பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதன் பின்னர் பரிசோதனைகளை மருத்துவமனையின் பதில் நீதிமன்ற மருத்துவ அதிகாரி மேற்கொண்டுள்ளார்.

எனினும் மருத்துவருக்கு சிறுமியின் மரணம் தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டதால் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக வவுனியா காவற்துறை குற்றதடுப்பு பிரிவிரிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

இதன் காரணமாக நேற்று இடம்பெற்ற பிரேதபரிசோதனையின் போது குறித்த சிறுமி துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.