17 இலட்சத்திற்கும் அதிகமான மியன்மார் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு…

இந்த வருடத்தின் முதல் ஆறுமாத காலப்பகுதியில் 17 இலட்சத்திற்கும் மேற்பட்ட மியன்மார் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கூடுதலான சுற்றுலா பயணிகள் தாய்லாந்தில் இருந்து வருகை தந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இது கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இரண்டு சதவீத வளர்ச்சியாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், 2020 ஆம் ஆண்டளவில் வருடத்திற்கு 70 இலட்சம் சுற்றுலா பயணிகளை கவருவது அரசாங்கத்தின் இலக்காகும்.