(FASTNEWS-COLOMBO) கிராம எழுச்சி வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கண்டி குண்டசாலை பிரதேசத்தைச் சேர்ந்த அம்பகோட்டையில் நிர்மாணிக்கப்பட்ட 172வது மாதிரிக் கிராமம் வீடமைப்பு, நிர்மாணத்துறை, கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட உள்ளது.
இந்தக் கிராமத்திற்கு ‘சங்ஹிந்தியாகம அதாவது நல்லிணக்கக் கிராமம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதில் மின்சாரம், குடிநீர், வீதி உட்கட்டமைப்பு முதலான வசதிகளுடன் 25 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், இங்கு வாழும் 26 குடும்பங்களுக்கு வீட்டு உரிமைப்பத்திரங்களை கையளித்தல், 175 பேருக்கு விசிறி கடனுக்கான காசோலைகளை வழங்குதல் முதலான நிகழ்ச்சிகளும் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.