
கோஹ்லியை பாராட்டிய காதலி.. கடுப்பில் மேத்யூஸ்..
இலங்கை அணியில் உள்ள இளம் வீரர்கள் விரைவில் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், இளம் வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட சற்று அவகாசம் தேவைப்படலாம். ஆனால் அத்தகைய நேரம் தற்போது இல்லை. சீனியர் வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றால் மற்றவர்கள் தான் பங்களிப்பு அளிக்க வேண்டும்.
தெரிவாளர்கள், அனைவரும் சிறப்பாக செயல்படும்படியான அணியை தெரிவு செய்ய வேண்டும். யாரும் கற்றுக் கொள்வதற்காக இங்கு வரவில்லை. அனைவரும் சேர்ந்து தான் அணியின் வெற்றிக்கு உழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கோஹ்லியை பாராட்டிய அனுஷ்கா
இந்திய வீரர் விராட் கோஹ்லி- பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரித்தனர்.
ஆனால் கோஹ்லி மீண்டும் அனுஷ்காவின் சகோதரர் மூலம் பழைய காதலை தொடர முயற்சித்து வருகிறார். இந்நிலையில் கோஹ்லியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அனுஷ்கா சர்மா இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதற்காக அவரை பாராட்டி வாழ்த்தியுள்ளாராம் .