நாமலின் பல உறவுகளால் அந்தரப்படும் குடும்பம்

நாடாளுமன்ற நாமல் ராஜபக்ஷவின் தேவைக்கேற்ப பெண்ணொருவர் ஜனாதிபதி செயலகத்தில் இணைத்துக் கொண்டமை தற்போது பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் சிறிலங்கன் விமான சேவையின் பணி பெண் ஒருவரை, நாமலின் ஆலோசனைக்கமைய ஜனாதிபதி செயலகத்திற்கு இணைத்து கொண்டு பயண கொடுப்பனவாக ஒன்றரை மில்லியன் வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அநுபமா வானகுரு என்ற குறித்த பெண்ணுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு இடையிலான உறவு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

நாமல் ராஜபக்சவும் அநுபமா வானகுருவும் சிறிலங்கன் எயார்னலைன் விமான சேவையின் விமான பயணத்தின் போதே சந்தித்து கொள்வார்கள். இந்த சந்தர்ப்பங்களில் அநுபமா வானகுரு என்பவர் உண்மையாகவே விமான பணிப்பெண்ணாகும்.

இதன் போது நாமல் ராஜபக்ச அனுபமாவுடன் நட்பாக பழக ஆரம்பித்துள்ளார்.

இந்த நட்பு வளர ஆரம்பித்ததன் பின்னர் அநுபமாவின் தந்தைக்கு அவசியமாக இருந்த சிறுநீரகம் ஒன்றை நாமல் தேடி கொடுப்பதாக கூறியுள்ளார்.

இவ்வாறு கூறி அனுபமாவின் வீட்டிற்கு நாமல் ராஜபக்ச தினமும் நுழைய ஆரம்பித்தார். இவ்வாறு நாமல் அநுபமாவின் வீட்டிற்கு நுழைய ஆரம்பித்தமையினால் அனுபமாவின் வாழ்க்கையின் பல விடயங்களை இழக்க நேரிட்டுள்ளது.

அனுபமா திருமண பந்தம் ஒன்றில் இணைய தீர்மானித்ததன் பின்னர் நாமல் ராஜபக்சவுக்கும் அனுபமாவுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட ஆரம்பமாகியது. அதன் பின்னர் அனுபமாவும் நாமலும் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

அதனை தொடர்ந்து அநுபமா பதிவு செய்யப்படாத நிதி திரட்டு நிறுவனம் ஒன்றை நடாத்தி போலி ஆவணங்களை தயார் செய்து பணம் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

பல லட்சம் ரூபாய் நிதி வழங்கிய சிலர் இது போலி நிறுவனம் என அறிந்த பின்னர் நிறுவனம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ள போதிலும் தற்போது வரையில் அந்த நிறுவனம் தொடர்பில் எவ்விதமான விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இறுதியில் இந்த மோசடியில் சிக்கியவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

எனினும் நாமல் ராஜபக்சவுக்கு அநுபமாவினால் கிடைக்கும் இன்பங்களின் காரணமாக, அநுபமா தொடர்பில் பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாதென நாமல் ராஜபக்சவினால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

அநுபமா வானகுரு என்ற விமான பணிப்பெண் தனது முகத்தை முகமூடியால் முடிக்கொண்டு அரசியல்வாதிகளுக்காக தன்னையே அர்ப்பணித்ததோடு மக்கள் பணத்தை கொள்ளையடித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

அத்துடன் அநுபமான கடந்த காலங்களில் சிறிலங்காவை பிரதிநிதித்துவப்படுத்தி உலக அழகி போட்டிகளில் கலந்து கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. என சமுக வலைத்தளங்கள் செய்தி வெளியாகி உள்ளது