கொழும்பு கோட்டை – கல்கிஸ்ஸை இடைப்பட்ட புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பாலங்களுக்கான சீரமைப்புப் பணி மற்றும் புதிய பாலம் அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதால் ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க அவர்கள் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன் காரணமாக, இம்மாதம் 18ம் திகதி இரவு 8.00 முதல் 22ம் திகதி மாலை 4.30 வரையிலும் கொழும்பு கோட்டை – கல்கிஸ்ஸை புகையிரத பாதையானது ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதனால், இக்குறித்த தினங்களில் ரயில் சேவைகளில் காலதாமதம் ஏற்படக்கூடும் என்பதோடு, வாரநாளான எதிர்வரும் 21ம் திகதியும் ரயில் சேவையில் தாமதம் ஏற்படும் எனவும் பொது மக்களுக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.