18 இந்திய மீனவர்கள் கைது…

(FASTNEWS|COLOMBO) இலங்கை வடக்கு கடற் பரப்பில் சட்ட விரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் நேற்று(05) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது இந்திய மீனவர்களின் 03 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் படகுகள் வடக்கு கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.