
இலங்கையின் அரசியல் நடைமுறை குறித்து இந்தியா மகிழ்ச்சி
இலங்கையின் நடைமுறை அரசியல் நிலை குறித்து இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கையின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, புதுடில்லி விஜயத்தின் போது பிரணாப் முகர்ஜியை சந்தித்துள்ளார்.
இதன்போது தாம் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய உத்தேசித்துள்ளதாக முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம் குறித்தும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
பிராந்தியத்தில் பலமிக்க நாடு என்ற வகையில் இந்திய தமது அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்துக்கொள்ள தயாராக உள்ளதாகவும் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
புதுடில்லியில் மார்ச் 11 முதல் 13 வரை இடம்பெற்ற மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காகவே ரவி கருணாநாயக்க அங்கு சென்றுள்ளார்.
