நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 உலகக்கிண்ண போட்டியில் பாகிஸ்தான் அணித்தலைவர் அப்ரிடி புதிய சாதனை படைத்துள்ளார்.
டி20 உலகக்கிண்ண தொடரில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதிய லீக் ஆட்டம் நேற்று மொகாலியில் நடந்தது.
இந்தப் போட்டியில் 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் தலைவரும், சுழற்பந்து வீச்சாளருமான அப்ரிடி 4 ஓவர்கள் வீசி 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன் மூலம் டி20 உலகக்கிண்ணத்தில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் மலிங்காவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார்.
முன்னதாக மலிங்கா 31 ஆட்டங்களில் விளையாடி 38 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருந்தார். தற்போதை அவரை அப்ரிடி (33 ஆட்டம், 39 விக்கெட்) முந்தியுள்ளார்.
மேலும், 36 வயதான அப்ரிடி ஒட்டுமொத்த டி20 போட்டிகளிலும் 97 விக்கெட்டுகளுடன் (97 ஆட்டம்) முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.