
அமைச்சர் ஜோன் இற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டி அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய பசுமையான சுற்றுச்சூழல் சங்கம் தீர்மானித்துள்ளது.
வத்தளை – மாபோல பகுதியில் ஜாகிங் செல்லும் நடைபாதையை உடைத்து சேதப்படுத்தியமை தொடர்பிலேயே, இன்று(05) அந்த பாதையை பயன்படுத்தியவர்களுடன் இணைந்து மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்னும், குறித்த இந்த வியடம் தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என, அச் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே அந்தப் பகுதி மக்களுக்கு பொலிஸார் மீதிருந்த நம்பிக்கை குறைவடைந்துள்ளதாகவும் பசுமையான சுற்றுச்சூழல் சங்கம் மேற்கோள்காட்டிக் குறிப்பிட்டுள்ளது.