வடமேல்மாகாணத்திலும் “1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேவை” இன்று(19) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அவரசநிலைமையின் போது இந்த சேவை கட்டணமின்றி இன்று முதல் வடமேல்மாகணத்தில் செயற்படவுள்ளது.
இதன்மூலம் வைத்தியசாலைக்கு முன்னரான சிகிச்சை நாடு முழுவதும் ஸ்தாபிக்கப்படுகின்றது.
இந்த சேவை 2018 ஜுலை மாதம் வடமாகாணத்திற்கும் ,ஆகஸ்ட் மாதம் ஊவா மாகாணத்திற்கும் ,செப்டம்பர் மாதம் வடமத்திய மாகாணத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.