1996 ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டியில் கலந்து கொண்டவர்கள் இந்நாட்டில் இருந்த சிறந்த வீரர்கள் இல்லை என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
குறித்த போட்டியில் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியின் தலைவராக செயற்பட்ட அர்ஜூன ரணதுங்க நேற்று(02) கணியவள அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் இது குறித்து தெரிவிக்கையில்;
“1996 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை வென்ற அணியில் அக்காலப்பகுதியில் இருந்த சிறந்த வீரர்கள் பங்கேற்கவில்லை. அதற்கு மேல் அதிக திறமை வாய்ந்த வீரர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் விளையாடியது நாட்டுக்காக அல்ல தமக்காக. நான் வீரர்களின் திறமையை பார்ப்பேன். ஆனால் நான் அதற்கு மேலும் பார்ப்பேன் இந்த வீரர்கள் மைதானத்திற்கு சென்றால் தமது நாட்டுக்காக உயிரையும் சரி கொடுக்கும் நபர்களா என்றும் நாட்டின் வெற்றிக்காக தமது வெற்றியை இரண்டாவதாக நினைத்து விளையாடும் நபர்களா என்றும். நான் அணியை அவ்வாறே தெரிவு செய்தேன்” என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
#riz