2ம் பயிற்சிப் போட்டி மற்றும் உலகக்கிண்ணம் குறித்து இலங்கை அணி பயிற்சியாளர் விசேட கருத்து

2016 இருபதுக்கு இருபது உலகக்கிண்ண போட்டியின் பயிற்சிப் போட்டி இரண்டிலும் இலங்கை அணியினர் தோல்வியடைந்தாலும் இரண்டாவது போட்டியில் வெளியிட்ட திறமை குறித்து தான் மகிழ்ச்சியடைவதாக அணிப்பயிற்சியாளர் க்ரூம் போர்ட் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.

“எங்களுக்கும் தற்போது ஒரு வாய்ப்புள்ளது. கடந்த போட்டியினை படிப்பினையாய் கொண்டு சிறப்பாக ஆட முடியும். டில்ஷான் வந்தவுடனேயே ஆட்டமிழந்தார், சந்திமால் மற்றும் திரிமன்ன சிறப்பாக ஆடினார்கள். இதனைக் கொண்டு நாம் திருப்தியடைய வேண்டும்” என க்ரூம் போர்ட் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று; லசித் மாலிங்க மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது மற்றும் மேதியூசின் தலைமையும் இலங்கை அணியினை உலகக்கிண்ண இறுதிவரை அழைத்துச் செல்லும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.