2வது நாள் ஆட்டத்தில் தென்னாபிரிக்கா சுருளுமா இந்தியா

இந்தியா– தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.

டீன்எல்கர், அம்லா தொடர்ந்து விளையாடினார்கள். இருவரும் நிதான ஆட்டத்தை கடைபிடித்தனர்.

அமித்மிஸ்ரா பந்தில் எல்கர் கொடுத்த கடினமான கேட்சை விக்கெட் கீப்பர் சகா தவறவிட்டார்.

சுழற்பந்துக்கு சாதகமான இந்த மைதானத்தில் இருவரும் ஒன்று, இரண்டு ரன்களாக சேர்த்தனர். 28–வது ஓவரில் தென்ஆப்பிரிக்கா அணி 50 ஓட்டங்களை தொட்டது.

டீன்எல்கர் 100 பந்தில் 28 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து இருந்தார். 35–வது ஓவரில் அந்த அணி 77 ஓட்டங்கள் எடுத்து இருந்தது.