கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நைஜீரியா நாட்டுப் பிரஜைகள் எட்டு பேரும் தங்கியிருந்த வீட்டுக்கு அருகிலான தோட்டத்திலிருந்து மேலும் 1,206 கிராம் கொக்கேய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த வீட்டு வளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே, அப்போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர். இவ்வாறு மீட்கப்பட்ட போதைப்பொருள், சுமார் இரண்டு கோடியே 41 இலட்சம் ரூபாய் பெறுமதியுடையது என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.