(FASTGOSSIP-INDIA) வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 புலிகளை நடிகர் விஜய் சேதுபதி தத்தெடுத்துள்ளார்.
கடந்த 2010ஆம் ஆண்டு, இங்குள்ள விலங்குகளை பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், தனியார் வங்கிகள், நடிகர்கள் போன்றோர் தத்தெடுத்து வளர்க்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று பூங்காவிற்கு சென்ற விஜய் சேதுபதி, ஆதித்யா, ஆர்த்தி என்ற 2 வங்கப்புலிகளை ஆறு மாதத்திற்கு தத்தெடுத்தார்.
மேலும் இவை இரண்டிற்கும் 6 மாதத்திற்கு தேவையான உணவுகளை வழங்குவதற்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையை உயிரியல் பூங்காவின் அதிகாரியிடம் வழங்கினார் விஜய் சேதுபதி.
