இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 19 வயதான புதுமுக வேகப் பந்து வீரர் அல்ஜரி ஜோசப் அணியில் இடம் பெற்றுள்ளார்.
வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டி தொடரில் ஆன்டிகுவாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 92 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டலில் வருகிற 30-ந் திகதி தொடங்குகிறது.
இந்த போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 19 வயதான புதுமுக வேகப் பந்து வீரர் அல்ஜரி ஜோசப் அணியில் இடம் பெற்றுள்ளார்.
முதல் டெஸ்ட்டில் இந்தியா ரன்களை குவித்தது. இதை கட்டுப்படுத்தும் விதமாக வெஸ்ட் இண்டீஸ் புதுமுக வீரரை தேர்வு செய்து உள்ளது.
ஜோசப் இந்த ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டவருக்கான உலக கோப்பை போட்டியில் 13 விக்கெட் கைப்பற்றி இருந்தார். மற்றபடி அணியில் மாற்றம் எதுவும் செய்யவில்லை.
2-வது டெஸ்ட்டில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் விவரம்:
- ஹோல்டர் (கெப்டன்)
- கிரேக் பிரசாத் வெயிட்
- ராஜேந்திர சந்திரிகா
- டாரன் பிராவோ
- சாமுவேல்ஸ்
- பிளாக்வுட்
- ரோஸ்டன் சேஸ்
- டவரிச் (விக்கெட் கீப்பர்)
- சார்லோஸ் பிராத் வெயிட்
- தேவேந்திர பிஷு
- கேப்ரியல்
- லியான் ஜான்சன்
- கும்மினஸ்
- அல்ஜாரி ஜோசப்