2 வருடங்களுக்குள் 2 வைத்திய கல்லூரிகளை அமைக்க அரசு திட்டம்….

இரண்டு வருடங்களுக்குள் சப்ரகமுவ மற்றும் குளியாபிடியவில் இரண்டு வைத்திய கல்லூரிகளை அமைக்க அரசாங்கம் தயாராகவுள்ளதாக, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குளியாபிடியவில் நிறுவப்படவுள்ள கல்லூரிக்கு முதற் கட்டமாக 200 மாணவர்களை இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், அரசாங்கம் இதற்காக 3 பில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று(08) இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அகில விராஜ் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டு ள்ளார்.

இதேவேளை சைட்டம் நிறுவனத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்ட விவாதம் ஒன்றுக்கு கூட நடவடிக்கை எடுத்ததாகவும், ஆனால் இங்கு இருப்பது தரம் குறித்த பிரச்சினையே எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்