2-1 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலையில்..

சுற்றுலா சிம்பாப்வே அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட் இழப்பிற்கு 310 ஓட்டங்களை பெற்றது.

ஹெமில்டன் மடகட்சா 111 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பதிலுக்கு 311 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.2 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் வெற்றி இழந்து இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் நிரோசன் திக்வெல்ல 102 ஓட்டங்களையும் தனுஷ்க குணதிலக 116 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

உபுல் தரங்க 44 ஓட்டங்களையும் , குசல் மெந்தீஸ் 28 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டனர்.

அதன்படி , ஐந்து போட்டிகளை கொண்ட குறித்த இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.

 
(rizmira)