அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினரால் மாத்திரம் 07 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளன.
அவற்றில் ஏற்கனவே 02 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தாமும் நேற்று(28) ஒரு எதிர்ப்பு மனுவைத் தாக்கல் செய்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தினங்களில் ஏனைய எதிர்ப்பு மனுக்களும் தாக்கல் செய்யப்படவுள்ளன.
மாகாண சபைத் தேர்தலை ஒரே நாளில் வைப்பதற்கு ஏதுவான வகையில் இந்த சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலம் வடமத்திய மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட போதும், ஊவா மாகாண சபையிலும், தென்மாகாண சபையிலும்தோல்வி அடைந்தது.
அத்துடன் இந்த சட்டமூலத்தை காலந்தாழ்த்தும் யோசனை ஒன்று தொடர்பில் நேற்று(28) மேல் மாகாண சபையில் குழப்பநிலை ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)