20வது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு எதிராக மற்றுமொரு மனு…

கடந்த 5 ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள 20வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் ராவண பலய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இத்தே கந்த சத்ததிஸ்ஸ தேரரால் மேலும் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சீர்திருத்தத்திற்கு எதிராக கடந்த 07 ஆம் திகதி பிவித்துரு ஹெல உருமயவின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தார்.