(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதனடிப்படையில் இதுவரையில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி 6 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
———————————————————————-[UPDATE 13.02 P.M]
20 ஆவது அரசியலமைப்புக்கு எதிராக ஐ.ம.சக்தி மனுத்தாக்கல்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, உயர் நீதிமன்றத்தில் விசேட மனுத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.