20 ஆவது திருத்தமா? பாராளுமன்றக் கலைப்பா?

பாராளுமன்றக் கலைப்பு பற்றியும்   பொதுத் ­தேர்தல் பற்றியும் முதலில்  ஐக்­கிய தேசி­யக்­ கட்­சியே பேசியது.­ எனினும், எமது சிறு­பான்மை அரசாங்கம் நீடித்­தி­ருப்­ப­தற்கு ஐ.ம.சு.மு.வே காரணம்.

அந்த வகையில் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­டுமா? அல்­லது 20 நிறைவேற்றப்படும? என்­பதை எதிர்க்கட்ச்சியே தீர்­மா­னிக்­க­ வேண்டும். எந்த தீர்­மா­னத்துக்கும் நாம் தயா­ரா­கவே இருக்­கின்றோம்.

எந்தவொரு பயமும் எமக்­கில்லை என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று கூடிய சபையில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை அமர்­வின்­ போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்பிக்கை­யில்லாப் பிரே­ரணை தொடர்பில் பிரதி வெளி­வி­வ­கார அமைச்சர் அஜித் பெரே­ரா­வினால் விடுவிக்­கப்­பட்­டி­ருந்த கூற்று தொடர்பில் எதிர்க்­கட்சி எம்.பியான தினேஸ் குண­வர்த்­தன சிறப்புரிமைப் பிரச்­சி­னைன ஒன்றை எழுப்­பினார்.

மேற்­படி சிறப்­பு­ரிமை பிரச்சினையானது, சபைக்குள் சர்ச்சை நிலையை உருவாக்கியதுடன். இது தொடர்பில் ஆளும்­கட்சி எதிர்­கட்சி உறுப்­பி­னர்­க­ளி­டையே வாதப்பிரதிவாதங்களும் எழுந்­த­துடன் சபையில் கூச்சல் குழப்ப நிலையும் ஏற்­பட்­டி­ருந்தமை குறிப்பிடத்தக்கது.