20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் முடிவின் அடிப்படையில் அணிகள் மற்றும் பேட்ஸ்மேன்கள், பவுலர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) நேற்று வெளியிட்டுள்ளது.
குறித்த தரவரிசையானது;
- இந்திய அணி (126 புள்ளிகள்)
- வெஸ்ட் இண்டீஸ் அணி (125 புள்ளிகள்)
- நியூசிலாந்து அணி (120 புள்ளிகள்)
- இங்கிலாந்து அணி (115 புள்ளிகள்)
- தென் ஆப்பிரிக்க அணி (115 புள்ளிகள்)
பேட்ஸ்மேன்கள் வரிசையில்;
- விராட்கோலி(இந்தியா) – (889 புள்ளிகள்)
- ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா) – (803 புள்ளிகள்)
- மார்ட்டின் கப்தில்(நியூசிலாந்து ) – (754 புள்ளிகள்)
- ஜோரூட்(இங்கிலாந்து) – (750 புள்ளிகள்)
- பாப் டுபிளிஸ்சிஸ்(தென் ஆப்பிரிக்கா) – (741 புள்ளிகள்)
வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ் 18-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
பந்து வீச்சாளர்கள் தர வரிசையில்;
- சாமுவேல் பத்ரீ(வெஸ்ட் இண்டீஸ் ) – (790 புள்ளிகள்)
- இம்ரான் தார்(தென் ஆப்பிரிக்ககா) – (740 புள்ளிகள்)
- அஸ்வின்(இந்தியா) – (712 புள்ளிகள்)
- அப்ரிடி(பாகிஸ்தான்) – (674 புள்ளிகள்)
- கைல் அப்போட்(தென் ஆப்பிரிக்கா) – (671 புள்ளிகள்)
இந்திய வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா 7-வது இடத்துக்கும், ரவீந்திர ஜடேஜா 10-வது இடத்துக்கும், நெஹரா 11-வது இடத்துக்கும் முன்னேறி உள்ளனர்.