200 000$ பெறுமதியான அப்பிள் 1 கணணியை தூக்கியெறிந்த பெண்

கடந்த சித்திரை மாதம் அமெரிக்காவில் குறித்த பகுதியொன்றில், ஒரு இனம் தெரியாத பெண்ணால் அப்பிள் – 1 வகை கணணி ஒன்று குப்பையில் வீசப்பட்டுள்ளது.

இக் கணணி 1976 ஆம் ஆண்டு ஸ்டீவ் ஜொப் உட்பட உருவாக்குனர் மூவரால் உருவாக்கப்பட்டது.

இக் கணனியை இனங்கண்டுகொண்ட நகர துப்பரவிற்கு பொறுப்பானவர் அதை ஏலத்திற்கு விட்டார்.

எதிர்பாராத வகையில் அக் கணணி 200 000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் போனது!

கணணியை குப்பையில் போட்ட பெண்ணிற்கு அதில் பாதி தொகையை கொடுப்பதற்கு அவர்கள் தயாராக உள்ளார்கள்.

ஆனால், அப் பெண் பற்றிய தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லையாம்.