மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் வீரர் யூனிஸ்கான் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இந்த மாதம் 13ம் திகதி டுபாயில் ஆரம்பமாகிறது.
இதில் டெங்கு காய்ச்சல் காரணமாக யூனிஸ்கான் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக பாகிஸ்தான் அணி, யூனிஸ்கான் இல்லாமல் டெஸ்ட் போட்டி ஒன்றில் முகம் கொடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.