2011ற்கு பின்பு அவுஸ்திரேலியா அணி டெஸ்ட் போட்டிக்காக இலங்கை விஜயம்.

டெஸ்ட் போட்டிகள் மூன்று, ஒருநாள் போட்டி ஐந்து மற்றும் இருபதுக்கு 20 போட்டி இரண்டுக்காக அவுஸ்திரேலியா அணியினர் இலங்கைக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

போட்டிகள் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ளதோடு, 2011ம் ஆண்டிற்கு பிறகு இவ்வருடமே குறித்த போட்டிகள் அவுஸ்திரேலியா – இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது.

போட்டிகள் பல்லேகல மைதானத்தில் ஜூலை 26 ஆரம்பமாக உள்ளது.

போட்டி கால அட்டவணை;

ஜூலை 26-30 – 1ம் டெஸ்ட் போட்டி, பல்லேகல

ஆகஸ்ட்  4-8 – 2வது டெஸ்ட் போட்டி, காலி

ஆகஸ்ட் 13-17 – 3வது டெஸ்ட் போட்டி, கொழும்பு

ஆகஸ்ட்  21 – 1ம் ஒருநாள் போட்டி,கொழும்பு 

ஆகஸ்ட் 24 – 2வது ஒருநாள் போட்டி, கொழும்பு

ஆகஸ்ட் 28 – 3ம் ஒருநாள் போட்டி, தம்புள்ள

ஆகஸ்ட் 31 – 4ம் ஒருநாள் போட்டி, தம்புள்ள

செப்டம்பர்  04 – 5ம் ஒருநாள் போட்டி, கண்டி

செப்டம்பர் 06  – 1ம் இருபது 20 போட்டி, கண்டி

செப்டம்பர் 09 – 5ம் ஒருநாள் போட்டி, கொழும்பு