
இலங்கைக்கு நிதியுதவி வழங்க முடியும்
சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் இரண்டு வாரத்திற்குள் இலங்கைக்கு வழங்கும் நிதியுதவி சம்பந்தமாக இறுதி முடிவொன்றை எட்ட முடியும் என்று கூறியுள்ளது.
இது தொடர்பான உடன்படிக்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவினால் மிக விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர் டாட் ஸ்னைடர் கூறினார்.
அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலமை சம்பந்தமாக தேடிப் பார்ப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் விஷேட குழுவொன்று கடந்த 31ம் திகதி முதல் நேற்று வரை இலங்கையில் தங்கியிருந்தனர்.
அந்தக் குழுவிற்கு தலைமை தாங்கிய டாட் ஸ்னைடர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், தற்போதைய இலங்கையின் பொருளாதாரக் கொள்கை ஒழுங்கமைப்பு சம்பந்தமாக திருப்தியடைய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
அதன்படி சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று வருட காலத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை நடந்து கொள்ள வேண்டிய முறைகள் சம்பந்தமாக கலந்துரையாடி இறுதி தீர்மானம் ஒன்றிற்கு வர முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
