2015ம் ஆண்டுக்கான இலங்கையின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது, இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தீவ்ஸ்க்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் மக்கள் தெரிவு விருது டி.எம்.டில்சானுக்கும், சிறந்த 20க்கு 20 பந்து வீச்சாளருக்கான விருது லசித் மலிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எதிர்கால சிறந்த கிரிக்கெட்டாளருக்கு விருதை குசல் மெண்டிஸ் பெற்றுள்ளார்.
2015ம் ஆண்டின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரருக்கான விருது தினேஷ் சந்திமாலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் பந்துவீச்சாளருக்கான விருது ரங்கன ஹேரத்துக்கும், ஒருநாள் சகலதுறை வீரருக்கான விருது அஞ்சலோ மேதியூசுக்கும் வழங்கப்பட்டுள்ளது.