ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்கு, 29 கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மினுவங்கொடவில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், “நாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மாத்திரமே செயற்பாட்டு நீதியான கட்சியாக உள்ளது. நான் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை பெற்று விட்டேன். 2015 ஜனவரி மாதமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி விட்டேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.