2016 ஆம் ஆண்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றிருந்தாலும், ஒரு சில சம்பவங்களே நம் மனதில் நிற்கும்.
அந்தவகையில், 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற சம்பவங்களின் அடிப்படையில் மிகச்சிறந்த புகைப்படங்கள் இதோ
நெரிசல் மிக்க சிறைச்சாலை
பிலிப்பைன்ஸில் போதை மருந்து பயன்படுத்திய மற்றும் கடத்திய குற்றத்திற்காக சுமார் 6,000 பேர் கொலை செய்யப்பட்டனர்.

குப்பை பொறுக்கும் சிறுமி
குழந்தை தொழிலாளர்கள் அதிகம் கொண்ட இந்தியாவில் சிறுமி ஒருவர், ஒதுக்குப்புறமாக கொட்டப்பட்டுள்ள குப்பைகளில் அவளுக்கு தேவையான பொருட்களை பொறுக்குகிறார்.

தெரு விளக்கில் படிக்கும் சிறுவன்
காஸாவை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது வீட்டில் மின்சாரம் இல்லாத காரணத்தால், தெரு விளக்கில் அமர்ந்து தனது வீட்டுப் பாடங்களை எழுதும் காட்சி இணையதளங்களில் வைரலானதை அடுத்து அவனது படிப்புக்கு பல்வேறு நபர்கள் நிதியுதவி அளித்தனர்.

உலகின் ஆபத்தான செல்பி
ஹாங்காங் நாட்டில் 3 நபர்கள் ஒன்று சேர்ந்து மிகவும் உயரமான கட்டிடத்தில் நின்றுகொண்டு செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் உலகளவில் வைரலானது.

ஆதரவற்ற குழந்தைகள்
உகாண்டா நாட்டில் அல்பினிசம் நோயால் பாதிக்கப்பட்ட ஏராளமான குழந்தைகள் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தால் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று, அக்குழந்தைகளுக்கு மருத்து உதவி அளிக்கும் காட்சி.

இமாலாய வாழ்க்கை
இந்தியாவில் உள்ள இமாலாயாவில் cannabis செடிகள் அதிக அளவில் வளர்கின்றன. இந்த செடிகளை உற்பத்தி செய்யும் தொழிலை செய்யும் விவசாயிகள் தங்கள் பணிகளை முடித்துவிட்டு அமர்ந்திருக்கும் காட்சி.

கண்ணீர் விடும் அகதிகள்
துருக்கி நாட்டை சேர்ந்த மக்கள் அகதிகளாக க்ரீஸ் நோக்கி படையெடுக்கின்றனர். தங்கள் உயிரை பணயம் வைத்து கடல் மார்க்கம் வழியாக வரும் இவர்களை தடுப்பதற்காக க்ரீஸ் நாடு கண்ணீர் புகைகுண்டுகளை வீசினாலும், அதனையும் பொருட்படுத்தாது கண்ணீர் சிந்தியபடி தங்களுக்கு இருப்பிடம் வேண்டும் என்ற கோரிக்கையோடு தஞ்சம் அடைகின்றனர்.

இரும்பு ரயில்
சகாரா பாலைவனத்தில் சுமார் நூறு கிலோ மீற்றர் தொலை வரை முதல் முறையாக இரும்பு ரயில் இயக்கப்பட்ட காட்சி.
