2017 ஆம் ஆண்டிலிருந்து பொலித்தின்,பிளாஸ்ரிக், ரெஜிபோம், பாவனைகளை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கே. எச் முதுகுடா ஆராச்சி தெரவித்துள்ளார்.
இவற்றின் தடை தொடர்பிலான சிபாரிசுகள் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி முன்வைத்துள்ள கருத்துகள் , யோசனைகளின் மீது அடுத்தாண்டு முதல் சிபாரிசுகள் அமுலாக்கப்படும்.
புதிய உத்தரவுகள் அமுலாகும் முன்னர் உற்பத்தியாளர்களும். பொதுமக்களும் புதிய ஏற்பாட்டுக்கு உகந்த வகையில் பழகிக் கொள்ள வேண்டும் இதற்கு 6 – 7 மாதங்கள் சலுகை காலமாக வழங்கப்படும்.
தற்போது 20 மைக்ரோன்களுக்கு குறைந்த பொலித்தின் இறக்குமதி செய்வதை நாம் முற்றாக நிறுத்தியுள்ளதுடன், விற்பனையாளர்களை முற்றுகையிட்டு வருவதாக பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.