2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நவம்பர் 10ம் திகதி சமர்ப்பிக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சுமார் ஒரு மாத காலம் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் விவாதம் நடத்தப்பட உள்ளதாகவும், எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ம் திகதி வரையில் விவாதம் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் ஏற்கனவே வரவு செலவுத் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.