கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமான க. பொ. த உயர்தரப் பரீட்சை இன்றுடன்(04) நிறைவடையவுள்ளது.
இன்றைய தினத்தில் பரீட்சைகள் நிறைவுபெற்றதன் பின்னர் பரீட்சை நிலைய வளாகங்களில் அமைதியற்ற முறையில் செயல்படுகின்ற மாணவர்களை கைது செய்யுமாறும் அவ்வாறு கைதுசெய்யப்படுகின்ற மாணவர்களின் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இரத்துசெய்யப்படலாம் எனவும் பரீட்சைகள் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.