2017 ஆம் ஆண்டில் மோட்டார் வாகனங்களின் பதிவு குறைவடைந்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டில் வாகன பதிவுகள் சுமார் 45 ஆயிரத்தினால் குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, 2016 ஆம் ஆண்டில் 4 இலட்சத்து 93 ஆயிரத்து 328 மோட்டார் வாகனங்கள் பதிவுசெய்யபட்டுள்ளதாகவும், 2017 ஆம் ஆண்டில் 4 இலட்சத்து 48 ஆயிரத்து 625 மோட்டார் வாகனங்கள் பதிவுசெய்யபட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.