நாட்டில் பாவனையில் உள்ள மருந்துப் பொருட்களில் 80 சதவீதமானவை அடுத்த வருடம் முதல் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அரச மருந்து கூட்டுத்தாபனம் இதுவிடயம் தொடர்பில் 38 ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாக நேற்று(03) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மருந்து உற்பத்திக்கென இரண்டு தொழிற்சாலைகள் ஸ்தாபிக்கப்படும் என்று தெரிவத்துள்ளார். கடந்த வருடம் அரச மருந்து கூட்டுத்தாபனம் ஆயிரத்து 800 மில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.