2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைகள் இன்றுடன்(12) நிறைவடைகின்றன.
குறித்த பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னர் பரீட்சை மத்திய நிலையங்கள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் மாணவர்கள் அமைதியற்ற வகையில் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதனை கண்காணிப்பதற்காக நடமாடும் பொலிசார் சேவையில் ஈடுபடவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இம்முறை பரீட்சைகளுக்காக 6 லட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.