2018 தேசிய உணவுக் கண்காட்சி எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகிறது.
இக் கண்காட்சி கொழும்பு – நெலும்பொக்குண கலையகத்தில் 7 ஆம் திகதி ஆரம்பமாகி 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
விவசாய அமைச்சு மற்றும் தேசிய உணவு அபிவிருத்தி சபையும் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன.
தேசிய உணவுகளை பிரபல்யப்படுத்துவது இதன் நோக்கமாகும்.
உள்நாட்டில் உற்பத்தியாகும் பானங்கள், மரக்கறிகள், பழ வகைகள் என்பன கண்காட்சிக்கூடங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.