2018 முதல் சாரதிப் பத்திரம் வழங்க புதிய முறை..

2018 ஆண்டு முதல் சாரதி அனுமதிப் பத்திரம் பெறுபவர்கள் கட்டாய ஒருநாள் செயலமர்வில் கலந்துகொள்ள வேண்டும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் டாக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் வீதி விபத்துக்களைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வருட ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து காரணமாக மாத்திரம் 1145 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 22 மரணங்கள் அதிகமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.