2019ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி அடுத்த மாதம் வெளியிடப்படும்

(FASTNEWS|COLOMBO) – 2019ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப்புள்ளி அடுத்த மாதம் வெளியிடப்படும் என பதில் உயர் கல்வி அமைச்சர் லக்கி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளி வெளியிடாமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் பல்கலைக்கழகங்களை மூடபட்டதன் காரணமாக இந்தப் பணிகள் தாமதமடைந்ததாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.